சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பிரபல பிசினஸ்மேன் டாக்டர் எ.வேலுமணி. தைராய்டு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பர் சிவகுமாரை சந்தித்தது பற்றிய பதிவுகளைப் போட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது குறித்த பதிவொன்றை இன்று பதிவிட்டுள்ளார். அந்த சந்திப்பில் நடிகர் சிவகுமாரும் உடனிருந்துள்ளார். “கனவு நனவானது… 50 வருடக் காத்திருப்பு. என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தது மகிழ்ச்சி. எனது கதை, எனது பயணம், 40 முழு நிமிடங்கள் கொடுத்தார். சூப்பர்ஸ்டார் எனது 'பன்ச்லைன்'களைப் பேசியதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. குளிர்ச்சியான சிரிப்பு, தூய்மையான கவனம். அவரை சந்தித்த போது, 'தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்,' என்றார். வாவ்..என்ன ஒரு பயணம், என்ன ஒரு மனிதத் தன்மை, அவர் ஒருவர் மட்டுமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.