நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் தற்போது ரஜினி நடித்திருக்கும் 'கூலி' படத்தில் தாஹா என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இது குறித்த போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். மேலும் கடந்த 1999ம் ஆண்டு திரைக்கு வந்த 'சர்பரோஸ்' என்ற ஹிந்தி படத்தில் துணை கமிஷனராக அஜய் சிங் ரத்தோடுவாக நடித்திருந்தார் அமீர்கான். அந்த படம் திரைக்கு வந்ததிலிருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கானின் வீட்டிற்கு ஒரு பேருந்தில் 25 ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் அவரை சந்தித்துள்ளார்கள். தன்னை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தனது வீட்டிற்கு வர வைத்து சந்தித்துள்ளார் அமீர்கான்.