அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' என தனது ஒவ்வொரு முந்தைய படங்களிலும் கனெக்சனை வைத்து ஒரு யுனிவர்சல் உருவாக்கி செயல்பட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில், கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய 'கைதி' படத்தின் கனெக்ஷனை கமல் நடித்த 'விக்ரம்' படத்தில் வைத்தார். அதில் அவரது வாய்ஸ் ஓவர் இடம்பெற்றிருந்தது. அதேபோல்தான் விஜய் நடித்த 'லியோ' படத்தில் கமல் பேசியிருந்தார். அடுத்து 'கைதி- 2' படத்திலும் கமல்ஹாசன் இடம்பெறப் போகிறார்.
இந்த நிலையில் தற்போது 'கூலி' படத்தின் புரமோஷன்களில் ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ், கோவையில் தான் படித்த பிஎஸ்ஜி கல்லூரிக்கு சென்றபோது, தன்னுடைய எல்சியு பற்றியும் மாணவர் முன்னிலையில் பேசி உள்ளார். அப்போது விஜய் இல்லாமல் எல்சியு இல்லை. அவர் இப்போது வேறு பாதையில் போய்விட்டார். மீண்டும் சினிமாவுக்கு வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவர் இல்லாமல் என்னுடைய எல்சியு முழுமையாகாது என்று பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.