
ரிலீஸ் தேதியை மாற்றிய ஆடுஜீவிதம்
கடந்த இரண்டு வருடங்களாக இதன் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சம்மர் விடுமுறையை குறிவைத்து வரும் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என இதன் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய திருப்பமாக, முன்கூட்டியே அதாவது மார்ச் 28ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓடிடி தளங்களுக்கு படங்கள் கொடுப்பது குறித்த ஒப்பந்த பிரச்னை காரணமாக திரையரங்குகள் புதிய மலையாள படங்களை இந்த வராத்திலிருந்து திரையிடுவதில்லை என போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இப்படி முன்கூட்டியே ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிடுவது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனைக்கு ஏற்ப ஆடுஜீவிதம் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், போராட்டம் நடைபெற்றாலும் அல்லது முடிவுக்கு வந்தாலும் இந்த படத்தை வெளியிட எந்த தடையும் இருக்காது என படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!