எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் 'அமரன்' படத்தின் தலைப்பு அறிவிப்பும், அதற்கான வீடியோவும் நேற்று வெளியானது.
இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகப் பணியாற்றி 2014ம் அன்று ஜம்மு காஷ்மீரில் மூன்று முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொன்று, தாக்குதலில் படுகாயமடைந்து பின் வீர மரணம் அடைந்தார். அசோக சக்கரம் விருது வென்ற அவரது பயோகிராபி படம்தான் 'அமரன்'.
இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் நேற்றைய தலைப்பு வீடியோவைப் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் படத்தின் கதாநாயகி சாய் பல்லவி.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜனை உங்களது உருவத்தில் இந்த உலகம் காணப் போவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது வைத்துள்ள அன்பையும், மரியாதையையும் உங்கள் மீதும் பொழிவார்கள். வாழ்க்கையை மாற்றக் கூடிய படங்களுக்காக கலைஞர்களான நாம் எவ்வளவு காலம் காத்திருக்கிறோம். அது இப்போது ராஜ்குமார் பெரியசாமி மூலம் நாம் இணையும் படத்தில் நடப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.