தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ஒரு படம் தயாராகிறது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதை கமல் தயாரிக்கிறார். நாளை(பிப்., 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி படத்திற்கு ‛அமரன்' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இன்று(பிப்., 16) மாலை வெளியிட்டனர். தமிழகத்தை சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரர் முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க காஷ்மீர் பின்னணியில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்... அதை இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் விதம்... சிவகார்த்திகேயனின் ராணுவ கம்பீரம்... என டீசர் விவரிக்கிறது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தின் டீசரை வெளியிட்டு கமல் வெளியிட்ட பதிவில், ‛‛பிறந்தநாள் காணும் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். #Amaran
(அமரன்) திரைப்படத்தின் டைட்டில் டீஸரை வெளியிடுவதில் மகிழ்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
1992ல் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் இதே தலைப்பில் ஒரு படம் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.