ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 2018ம் ஆண்டு 'உத்தரவு மஹாராஜா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பி சென்றார். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'சத்தம் இன்றி முத்தம் தா' படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஹரிஷ் பெரடி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜூபின் இசை அமைக்கிறார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
காதலும், சஸ்பென்சும் கூடிய ஒரு திரில்லர் படம் இதுவாகும். இது எதிர்பாராத திருப்புமுனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புனையப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்றிராத புது விதமான கதாபாத்திரத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையில் நடித்த படம். ஸ்ரீகாந்த் மற்றும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். ஹரிஷ் பெரடி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். என்றார்.