வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
டைம் மிஷின் கான்செப்ட்டை மையப்படுத்தி ‛இன்று நேற்று நாளை' என்கிற பேண்டஸி படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். அதை தொடர்ந்து அதேபோல விண்வெளியை மையப்படுத்தி இன்னொரு பேண்டஸி படமாக அயலான் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருந்தார். நீண்ட இழுபறிக்கு பின் இந்த படம் சமீபத்தில் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெறாவிட்டாலும் டீசன்டான வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி அதற்கான வி.எப்.எக்ஸ் உள்ளிட்ட வேலைகளும் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் ரவிக்குமாரின் முதல் வெற்றி பெறமான ‛இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது. அதே சமயம் இந்த படத்தை ரவிக்குமாருக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்பி கார்த்தி என்பவர் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதன்பிறகு கடந்த மூன்று வருடங்களாக அந்த படம் குறித்து எந்தவிதமான முன்னேற்ற தகவல்களும் இல்லை.
இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவரிடம் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛ஒவ்வொரு முறையும் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்பாராத விதமாக தடைபட்டு நிற்கிறது. ஒருவேளை அந்த படம் முழுவதும் கைவிடப்பட்டுள்ளதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.