நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‛விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார்கள். இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.தாணு. தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது இந்த கைதட்டல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் ‛‛நெதர்லாந்த், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது...'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.




