ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர் அட்லியும், நடிகை பிரியாவும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 9 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு மகன் பிறந்தான். அவருக்கு நீல் என்று பெயர் வைத்தார்கள். அதோடு அடிக்கடி மகனின் புகைப்படத்தை அட்லியும் பிரியாவும் அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் அட்லி, மகனுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், கடவுள் எனக்கு அனுப்பி வைத்த எங்கள் குட்டி நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஓராண்டு முடிந்து விட்டதை நம்பவே முடியவில்லை. இந்த அழகான பரிசை கொடுத்த கடவுளுக்கு நன்றி. என் மகனை மிகவும் நேசிக்கிறேன். எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இன்று இந்த குட்டி நண்பன் கிடைத்துள்ளான். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். கடவுள் உன்னை நிறைய புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் அட்லி.
மகனின் முதல்பிறந்தநாளை டிஸ்னிலேண்ட்டில் கொண்டாடி உள்ளனர் அட்லி - பிரியா தம்பதியர்.