'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி |

ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரிஸ், சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. மோகன்லால் நடிப்பில் தற்போது இவர் இயக்கி இருக்கும் படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. மோகன்லாலுடன் மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசை அமைத்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மோகன்லால் பேசியதாவது: மலைக்கோட்டை வாலிபன் பிரமாண்டமான படமாக இருக்கும். இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இப்படத்தின் கதை எனக்காகவே எழுதப்பட்டதல்ல. நானும், இயக்குநர் லிஜோவும் பல கதைகள் குறித்து விவாதித்தோம். அதில் நான் இந்தக் கதையை தேர்வு செய்தேன். எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். அதுதான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது. சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வருட உழைப்பை கொடுத்து உருவாக்கி உள்ளோம். என்றார்.