விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் நானியின் ‛ஹாய் நானா' தெலுங்கு படத்தில் கூட ஜெயராம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாளத்தில் ‛ஆப்ரஹாம் ஒஸ்லர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம்.
இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். இதுதவிர இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜன.,11ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை நடிகர் மகேஷ்பாபு வரும் ஜனவரி 3ம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியிட இருக்கிறார். தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் குண்டூர் காரம் படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் மகேஷ்பாபு ஜெயராம் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.