பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படங்களில் படையப்பா திரைப்படம் ஒரு தனித்துவமான மிகப்பெரிய வெற்றி படம். அந்த படத்தில் ஹீரோவுக்கு சமமாக ஹீரோயினுக்கும் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, “நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதும்போது என் மனதில் தோன்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அவரது நிஜ வாழ்க்கை குணாதிசயங்களை மையப்படுத்தி தான் நீலாம்பரியை உருவாக்கி இருந்தேன். ஜெயலலிதாவிற்கு என ஒரு ஸ்டைலிஷான பாடி லாங்குவேஜ் உண்டு. அதை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்தேன்” என்று கூறினார்.
ஆனால் இவரது இந்த பேச்சு அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.எஸ் ரவிக்குமாரின் இந்த பேச்சை கண்டித்து பேசி உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இது போன்று ஏன் பேசவில்லை? இப்போது மட்டும் எப்படி தைரியமாக பேசுகிறார்? கே.எஸ். ரவிக்குமார் ஒரு கோழை. இனி இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.