கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை |
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படம் பற்றி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். அதில், இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நாளை மே 25ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த படத்தின் டெலிவரி அதாவது ரிலீஸ் ஜூன் மாதம் என்றும் ஒரு போஸ்டர் மூலம் அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த போஸ்டரில், கர்ப்பமாக இருக்கும் வனிதா வயிற்றில் ராபர்ட் மாஸ்டர் முத்தமிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீமன், ஷகிலா, டாக்டர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.