ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தாலும் கூட சினிமாவில் நுழைந்த போது அவரது நாட்டம் என்பது இசையில் மட்டுமே இருந்தது. படத்திற்கு இசையமைப்பது, பாடல்களை பாடுவது, ஆல்பம் உருவாக்குவது என்று இருந்தவரை, காலம் ஏழாம் அறிவு படம் மூலம் நடிகையாக மாற்றி விட்டது. இருந்தாலும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் 2009ல் தானே இசை அமைத்த, தன் தந்தையின் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு பாடலையும் பாடி இருந்தார் ஸ்ருதிஹாசன்.
அதை தொடர்ந்து 16 ஆண்டுகள் கழித்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள தனது தந்தை கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் படத்தில் மீண்டும் விண்வெளி நாயகனே என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆச்சரியமாக கடந்த 2010ல் செம்மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம் என்கிற பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன் அதேபோல கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இந்த வருடம் வெளியான காதலிக்க நேரமில்லை என்கிற படத்தில் மீண்டும் அவரது இசையில் பாடி இருந்தார். அடுத்ததாக தக் லைப் படத்திலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




