'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

கடந்த சில நாட்களாக மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் கூட வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். அவர்களில் விஷால், கஸ்தூரி உள்ளிட்ட சிலர் இந்த பாதிப்பையும், நிவாரண பணிகளில் அரசாங்கம் வேகமாக செயல்படவில்லை என்பது குறித்த விமர்சனங்களையும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை ‛அருவி' புகழ் அதிதி பாலனும் அரசாங்கம் எங்கே இருக்கிறது என ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகருக்குச் சென்றேன். சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை நீரை இந்த ஏரியாவுக்குள் பம்ப் செய்தனர். இறந்து போன இரு விலங்குகள் மிதந்துக் கொண்டிருந்தன. இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் காப்பாற்ற நாங்கள் இதே தேங்கிய தண்ணீரில் நடக்க வேண்டியிருந்தது. மேலும் முதல்வரின் கான்வாய் வருவதாக கூறி அங்கிருந்த எனது காரை உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகள் நிர்பந்தப்படுத்தினர். வரும்போது கோட்டூர்புரத்தில் ஆறு வீரர்கள் ஒரு மிதவை படகுடன் ஒரு மிகப்பெரிய விஐபியை மீட்பதற்காக புறப்பட்டு சென்றனர். அரசாங்கம் எங்கே இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.