அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் பாரதிராஜா குடும்பத்தினருக்கு நெருக்கமான இளையராஜா குடும்பத்தில் இருந்து இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் உள்ளிட்டோர் செல்லவில்லை. அதேப்போல் ரஜினி, கமல், அஜித் போன்றோரும் செல்லவில்லை.
தற்போது பாரதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார் இயக்குனர் கங்கை அமரன். அப்போது பாரதிராஜாவிடம் பழைய நினைவுகளை பகிர்ந்த கங்கை அமரன், அந்தக்காலக்கட்டத்தில் அவர்கள் பணியாற்றிய சமயத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், பாடல் உருவான விதம் போன்றவற்றை பகிர்ந்தார். அதோடு சில பாடல்களையும் பாடி அந்த பாடல் வந்த விதம் பற்றியும் நினைவலைகளை பகிர்ந்தார். இதையெல்லாம் பாரதிராஜா அமைதியாக கேட்டபடி இருந்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது.