செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. சீரியல் நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து கர்ப்பமான சங்கீதா தான் நடித்து வந்த சீரியலில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார் ரெடின் கிங்ஸ்லி. இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர்.
தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. "அனைவரது வாழ்த்துகளுடன் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது" என்று சங்கீதா இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.