மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடல்ல தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார். இதற்கிடையே ராம்குமாரின் தம்பியான நடிகர் பிரபுவும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'அன்னை இலத்தின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. எனது சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சினையில் எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் பிரபு தரப்பு, ''ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக 3ம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட நான் கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்த செய்ய வேண்டும்'' என வாதிட்டது.
இதனை கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், ''ராம்குமார் உங்கள் சகோதரர்தானே? ஒன்றாகதானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே?'' எனத் தெரிவித்தார்.
''இது போன்று அவருக்கு உதவ முடியாது; நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார்'' என பிரபு தரப்பு பதிலளித்தது. இதனையடுத்து இந்த வழக்கு ஏப்.,8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.