செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடல்ல தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார். இதற்கிடையே ராம்குமாரின் தம்பியான நடிகர் பிரபுவும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ''ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக 3ம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்த செய்ய வேண்டும்'' என பிரபு தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கை ஏப்.,8க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ''அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை, அன்னை இல்லத்தில் எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன்'' என ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், நாளைக்கு (ஏப்.,9) வழக்கை தள்ளிவைத்தது.