‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள படம் 'குட் பேட் அக்லி'.
இதுவரை வெளிவந்த அஜித் படங்களிலேயே இந்தப் படத்தின் டிரைலருக்கு அதிகப் பார்வைகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக யூடியூப் தளத்தில் விஜய் படங்களின் வீடியோக்கள்தான் சாதனை படைக்கும். அதை 'குட் பேட் அக்லி' டிரைலர் முறியடித்துள்ளது.
டிரைலருக்கு இப்படி ஒரு 'குட்' ஆன வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்திற்கும் அப்படியே கிடைக்கும் என படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. படம் வியாழக்கிழமை வெளிவந்தாலும் சனி, ஞாயிறு, திங்கள் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
படம் மட்டும் 'பேட்' ஆக இல்லாமல் 'குட்' ஆக இருந்துவிட்டால் போதும். டிரைலரில் 'லியோ'வை முந்தியது போல வசூலிலும் முந்திவிடலாம்.