காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பார்க்கிங் பிரச்சினையால் ஒருவன் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவான் என்பதை ஆழமாக காட்சிப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று வெளியாகிறது.