ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா நடிப்பில் பார்க்கிங் என்ற படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். கார் பார்க்கிங் சம்பந்தமாக இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படம் தற்போது சில மொழிகளிலும் ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இதுவரை தனது புதிய படத்தை அறிவிக்காத நிலையில், தற்போது சிம்புவிடத்தில் ஒரு கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார். அதையடுத்து ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தக்லைப் படத்தை அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கும் சிம்பு அந்த படத்தை முடித்ததும், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். ஓமை கடவுளே படத்தை முதன்முதலாக இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, தற்போது லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.