அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டிக்கிடையே திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார் தர்ஷன். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து தர்ஷனை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சனம் ஷெட்டி.
இந்த நிலையில், நேற்று பார்க்கிங் பிரச்சினையில் நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதலில் தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பற்றி இணையப்பக்கத்தில் சனம் ஷெட்டி ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், தர்ஷனை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் ஒரு நொடி எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாஸ்பிட்டலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொன்னது தான் உண்மை என்றால், அதற்கு ஆதாரமாக சிசிடிவி புட்டேஜை வெளியிடலாமே. இரண்டு பேருக்கும் இடையே மோதல் நடைபெற்று இருக்கும் போது தர்ஷன் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்யாத நபர் தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும் என்று தர்ஷனுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.