கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' |
2002ம் ஆண்டில் ஹரி இயக்கிய முதல் படம் தமிழ். இந்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதையடுத்து சாமி, கோவில், ஐயா, சிங்கம் என பல ஹிட் படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக விஷால் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தனது முதல் பட ஹீரோவான பிரசாந்த்தை வைத்து புதிய படத்தை இயக்க போகிறார் ஹரி. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர் ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு பிரசாந்தின் பிறந்தநாளான நாளை (ஏப்ரல் 6) வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.