அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஜெயிலர், லால் சலாம் படங்களை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டு தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. அது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ரஜினி 171வது படம் ஐமேக்ஸ் கேமராவை கொண்டு படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் என்னிடத்தில் ஒரே ஒரு வரிதான் கூறினார். அதை வைத்து பார்க்கும் போது, இந்த படம் ஒளிப்பதிவாளருக்கு சேலஞ்சிங்கான படமாக இருக்கும் என்பதோடு, இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.