விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமா உலகில் 2 கே காலத்தில் குறிப்பிடும் கதாநாயகியாக இருந்தவர் லைலா. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய 'பிதாமகன்' படத்தின் கதாபாத்திரமும், நடிப்பும் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் ரசிகர்களால் சிரிப்பழகி என்றழைக்கப்பட்டவர். இப்போதும் அதே சிரிப்புடன் வலம் வருகிறார்.
பிரசாந்த்துடன் 'பார்த்தேன் ரசித்தேன்', விக்ரமுடன் 'தில்', சூர்யாவுடன் 'நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன்', அஜித்துடன் 'தீனா, பரமசிவம்' ஆகிய படங்களில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தில் நடித்தார்.
தற்போது விஜய்யின் 68வது படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இன்று லைலாவுக்குப் பிறந்தநாள். அவரது பிறந்தநாளில் 'விஜய் 68' பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்ல, 'பிதாமகன்' வெளிவந்து 20 ஆண்டுகளாகிவிட்டது. 'சர்தார்' படம் வெளிவந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு வருடமாகிவிட்டது.
தனது பிறந்தநாளில் இத்தனை மகிழ்ச்சியான செய்திகள் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வீடியோவில், “பிதாமகன் 20 வருடம், சர்தார் படத்தின் ஒரு வருடம், 'தளபதி 68' படத்தின் அறிவிப்பு, எனது பிறந்தநாள் எப்போதுமே ஸ்பெஷலாக ஏதாவது தரும், உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.