‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் பன்முகதன்மை கொண்டவர். நடிகை, பாடகி, இசை அமைப்பாளர் என பல முகங்கள் அவருக்கு. எல்லாவற்றையும் விட இசைக்கே அதிக முக்கியத்தும் கொடுப்பவர். ஸ்ருதிஹாசன் ஏற்கனவே 'எட்ஜ்', 'ஷீ இஸ் எ ஹீரோ' என்ற 2 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவரது 3வது இசை ஆல்பம் வெளிவர இருக்கிறது.
இந்த இசை ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஸ்ருதி பாடல் எழுதி, இசை அமைத்து, பாடி நடிக்கிறார். அவருடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். சிறப்பு தோற்றமாக கமல்ஹாசனும் பாடி, ஆடுகிறார்.
தற்போது இசை ஆல்பத்துக்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த இசை ஆல்பம் வெளியிடப்படுகிறது. கமல்ஹாசன்- ஸ்ருதிஹாசன் இணையும் இசை ஆல்பம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கமலின் நடிப்பில் வெளியான ‛உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.