விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ள படம் 'தீ இவன்'. டி.எம்.ஜெயமுருகன் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சன்னி லியோன், அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன், ஹேமந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெயமுருகன் இசை அமைத்துள்ளார். அலிமிர்ஸா பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ஜெயமுருகன் கூறியதாவது: பராசக்தி, மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் 'தீ இவன்'. இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான். அந்த வித்தையை இந்த படத்தில் பார்க்கலாம்.
அதே சமயம் ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும் போது. “ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு” என்று சொல்வார்கள் அதன்படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், “தாலிகட்டாம தாயவாதும் தாலிகட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல்” என்றும் சொல்வார்கள். அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வுமட்டு மல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், “ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் நல்ல சமூகம் படைக்க முடியும்” என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படம். கார்த்திக் படத்தின் கதையை கேட்டதும் அவர் வாங்கும் சம்பளத்தில் முன்றில் ஒரு பங்கை குறைத்துக் கொண்டார். அவர் நடித்து முடித்த பிறகு கொடுக்க வேண்டிய 3 லட்சம் ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.