''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4, 5 மணிக்கும், காலையில் 7, 8 மணிக்கும் என சிறப்புக் காட்சிகள் நடைபெற்று வந்தன. இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி கீழே விழுந்து இறந்து போனார். அந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரம் சென்றது. தமிழக அரச தரப்பிலிருந்து இப்படியான சிறப்புக் காட்சிகளுக்கு இனி அனுமதி வழங்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்கள். அதன் பிறகு வெளிவந்த எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கும் மேலே குறிப்பிட்டபடியான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'ஜவான்' படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிகளை சில தியேட்டர்களில் நடத்தியுள்ளார்கள். அவற்றிற்கு அரசு தரப்பிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால், இனிமேல் காலை 9 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் காலை 11 மணிக்கு மேலும், மற்ற நகரங்களில் காலை 10 மணிக்குப் பிறகும்தான் சினிமா காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த நடைமுறை மட்டுமே இனிமேல் தொடரும் எனத் தெரிகிறது.
நாளை வெளியாக உள்ள 'மார்க் ஆண்டனி' படத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் காலை 9 மணிக்குக் கூட சிறப்புக் காட்சிகளை நடத்தவில்லை. சென்னையில் உள்ள ரோகிணி, கமலா ஆகிய தியேட்டர்களில் மட்டுமே காலை 9 மணி காட்சிகள் நடைபெறுகிறது. நோட்டீஸ் வந்தாலும் பரவாயில்லை என அவர்கள் நடத்துகிறார்களா என்பது தெரியவில்லை.
எனவே, அடுத்த மாதம் வெளியாக உள்ள விஜய்யின் 'லியோ' படத்திற்கு காலை 9 மணி காட்சி கூட நடைபெற வாய்ப்பில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம். இது குறித்து தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கவும் வாய்ப்புள்ளது.