பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் |
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‛தி ராஜா சாப்'. அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, நித்தி அகர்வால், ரித்திக் குமார், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. நேற்று மாளவிகா மோகனனின் பிறந்த நாளையொட்டி படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே இந்த படம் டிசம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த போஸ்டரில் அந்த ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. அதையடுத்து டோலிவுட்டில் தி ராஜா சாப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் பரவியது. அன்றைய தினம், ஏற்கனவே பல படங்கள் போட்டியில் உள்ளன. இதனால் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருப்பதாக செய்தி பரவுகிறது. பிரபாஸின் ரசிகர்கள் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்படக்குழுவுக்கு சோசியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.