சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛கூலி' படம் ஆக., 14ல் ரிலீஸாகிறது. ஐதராபாத்தில் நடந்த கூலி பட நிகழ்ச்சியில் அதில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா பேசியதாவது : 'அன்னமய்யா' படத்தில் நடித்தபோது அப்போது ‛ஏன் இப்படி ஒரு கதை' என்று சிலர் என்னை கேலி செய்ய முயன்றனர். ஆனால் எனக்கு புதுமை பிடிக்கும். செட்டிற்கு சென்ற பிறகு சலிப்பு ஏற்பட கூடாது என்றால், வித்தியாசமான பாத்திரங்களை செய்ய வேண்டும்.
அந்தவகையில் லோகேஷ் உடன் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'கூலி' கதையைச் சொன்னதும், எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 'ரஜினி சார் இந்த கதையை ஏற்றுக் கொண்டாரா?' என்று கேட்டேன். ஏனென்றால், இந்த கதையில் 'சைமன்' கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். லோகேஷ் ஹீரோவையும், வில்லனையும் சமமாக சித்தரிக்கிறார். என் திரை வாழ்க்கையில் முதல்முறையாக, லோகேஷ் கதை சொல்வதை ரெக்கார்ட் செய்தேன். வீட்டிற்கு சென்ற பிறகு அதை திரும்பத் திரும்பக் கேட்டேன். எனக்கு தேவையான சில மாற்றங்களை பரிந்துரைத்தேன். மற்றவர்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால், நான் சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு லோகேஷ் 'சைமன்' பாத்திரத்தை வடிவமைத்த விதம் எனக்கு பிடித்திருந்தது.
ரஜினி சார் சொன்னது போல், படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல (சிரிக்கிறார்). இந்த படப்பிடிப்பின் போது, ரஜினி சார் அவரே வந்து என்னிடம் பேசினார். அது அவருடைய பெருந்தன்மை. அவர் என்னை சந்தித்தபோது, சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். 'நீங்கள் இப்படி இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், நாகார்ஜுனாவை நம் படத்தில் வைக்க வேண்டாம் என்று லோகேஷிடம் சொல்லியிருப்பேன்' என்றார். இத்தனை வருடங்கள் மற்றும் இத்தனை படங்கள் நடித்த பிறகும், ரஜினி சார் ஓரமாகச் சென்று வசனங்களை பயிற்சி செய்வார். புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.
தாய்லாந்தில் 17 நாட்கள் இரவு நேரத்தில் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கினோம். 350-க்கும் மேற்பட்டோர் மிகவும் கடினமாக உழைத்தனர். கடைசி நாளில், ரஜினி சார் எல்லோரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுத்து, வீட்டிற்கு செல்லும்போது குழந்தைகளுக்காக ஏதாவது வாங்கிச் செல்லுங்கள் என்றார். அவர் அவ்வளவு நல்ல மனம் கொண்டவர் ''என்றார்.