பிளாஷ்பேக் : என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 'ஸ்பூப்' கதை | பாலிவுட் பாடகர் முகமது ரபியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லி! | தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வர வேண்டும் : கிச்சா சுதீப் அழைப்பு | தெறி படத்தை விட வசூலில் பின்தங்கிய பேபி ஜான்! | வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் | குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, சிவகார்த்திகேயன் | சப்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ | விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது | சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு |
ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' படத்தை இயக்கி வருகிறார்.
விஜய் படத்தை இயக்கினால் அடுத்து ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என சில ரசிகர்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். அதற்கு உதாரணமாக இயக்குனர் நெல்சனையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தனர். விஜய் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நெல்சனுக்கு 'ஜெயிலர்' படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது போலவே இப்போது லோகேஷுக்குக் கிடைத்துள்ளது.
அப்படியென்றால் அடுத்து வெங்கட் பிரபுவுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். விஜய்யின் 68வது படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபுதான். அதனால், அடுத்து அவர் ரஜினியை இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களை இயக்கிய அட்லீக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, அவர் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானை இயக்கப் போய்விட்டார். இது பற்றி ரசிகர்கள் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை விஜய்யின் மூன்று படங்களை இயக்கினால் பாலிவுட் போகலாம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.