'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.
அதே தேதியில் 'சந்திரமுகி 2' படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென அப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதி தள்ளி வைத்துவிட்டார்கள். இதனால், எந்தவிதமான போட்டியும் இல்லாமல் 'மார்க் ஆண்டனி' படம் வெளியாகப் போகிறது. இப்படம் தவிர வேறு சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது.
'மார்க் ஆண்டனி' படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய டிரைலர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'டைம் டிராவல்' அடிப்படையிலான கதை என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‛இரும்புத் திரை' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த “சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி” ஆகிய ஏழு படங்களுமே தோல்விப் படமாகத்தான் அமைந்தது. அந்த இறக்கத்தை 'மார்க் ஆண்டனி' ஏற்றிவிடுமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.