ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில் தான். கடந்த 2012ல் வெளியான 'தட்டத்தின் மறயத்து' என்கிற படத்தில் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக இவர் அறிமுகமான இந்த படத்தை இயக்குனர் வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார் இஷா தல்வார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து மீண்டும் வினீத் சீனிவாசன் படத்தில் இணைந்துள்ளார் இஷா தல்வார்.
ஆனால் இந்த படத்தில் இயக்குனராக அல்ல, கதாநாயகனாக நடிக்கிறார் வினித் சீனிவாசன். ‛ஒரு ஜாதி ஒரு ஜாதகம்' என்கிற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகிலா விமல் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எம்.மோகனன் இயக்குகிறார். சென்னை கண்ணூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.




