தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மலையாளத்தில் தான் நடித்துவரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தை முடித்த கையுடன் அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். ஜனதா கேரேஜ், விஸ்மயா ஆகிய படங்களை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மோகன்வால் தெலுங்கில் நடிக்கும் படம் இது. அதேசமயம் இந்த படத்தை கன்னட இயக்குனர் நந்தா கிஷோர் இயக்குகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகைகள் ஊர்வசி ரவுட்டேலா, நேகா சக்சேனா ஆகியோர் நடிக்க தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்த்தின் மகன் ரோஷன் மேகா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்குபெற்ற ஒரு மிகப்பெரிய சண்டைக் காட்சியும் இங்கே படமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மிக நீண்ட ஷெட்யூல் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை இந்த வருடத்திற்குள்ளாகவே வெளியிடும் திட்டத்துடன் உருவாக்கி வருகின்றனர்.




