அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
புதுடில்லி : 2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இன்று(ஆக., 24) அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக ‛கடைசி விவசாயி' தேர்வாகி உள்ளது. அதில் நடித்த மறைந்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படம் 6 விருதுகளை வென்றுள்ளது. மாதவனின் ‛ராக்கெட்ரி' படம் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. தேசிய விருதுகள் விபரம் வருமாறு :
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்
சிறந்த படம் - ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்ஸ் (ஹிந்தி)
சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகை - ஆலியா பட் (கங்குபாய்), கிர்த்தி சனோன்(மிமி)
ஒட்டுமொத்த சிறந்த பொழுதுபோக்கு படம் - ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)
சிறந்த தேசிய படம் - தி காஷ்மீர் பைல்ஸ்
சிறந்த சமூக படம் - அனுநாத் - தி ரிசோனன்ஸ் (அசாமி)
சிறந்த இயக்குனர் - நிகில் மகாஜன் (கோதாவரி - தி ஹோலி வாட்டர்)
சிறந்த குணச்சித்ர நடிகை - பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் பைல்ஸ்)
சிறந்த குணச்சித்ர நடிகர் - பங்கஜ் திரிபாதி (மிமி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பவானி ரபாரி ( லாஸ் பிலிம் ஷோ)
சிறந்த பாடகி - ஸ்ரேயா கோஷல் (மாயவா... - இரவின் நிழல்)
சிறந்த பாடகர் - காலா பைரவா (மொமுரம் பீமுடு - ஆர்ஆர்ஆர்)
சிறந்த அறிமுக இயக்குனர் - விஷ்ணு மோகன்(மெப்பாடியன்)
சிறந்த ஒளிப்பதிவு - ஆவிக் (சர்தார் உதம்)
சிறந்த திரைக்கதை - நயாட்டு (மலையாளம்- ஷாகிர் கபூர்), கங்குபாய் (சஞ்சய் லீலா பன்சாலி)
சிறந்த ஆடை வடிவமைப்பு - வீரா கபூர் (சர்தார் உதம்)
சிறந்த மேக்-அப் - பிரீத்தி ஷீல் சிங் (கங்குபாய்)
சிறந்த சண்டை இயக்குனர் - கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த இசை - தேவிஸ்ரீ பிரசாத்(புஷ்பா), எம்எம் கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய்)
சிறந்த பாடல் ஆசிரியர் - சந்திரபோஸ்
சிறப்பு விருது - ஷெர்ஷா (விஷ்ணுவர்தன்)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - வி ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த நடனம் - பிரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்)
6 விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடித்த ‛ஆர்ஆர்ஆர்' படம் சிறந்த பொழுதுபோக்கும் படம், இசை, நடனம், சண்டை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், பாடகர் என 6 தேசிய விருதுகளை வென்றது.
ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது
இசையமைப்பாளர் தேவாவின் மகனான இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு ‛கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாண்டிக்கு விருது
கடைசி விவசாயி படம் தமிழில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. இதில் நடித்த மறைந்த நல்லாண்டிக்கு தேர்வு குழுவின் சிறப்பு விருதாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொழிவாரியாக திரைப்பட விருதுகள்
சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி
சிறந்த தெலுங்கு படம் - உப்பென்னா
சிறந்த கன்னட படம் - 777 சார்லி
சிறந்த மலையாள படம் - ஹோம்
சிறந்த ஹிந்தி படம் சர்தார் உதம்
சிறந்த குஜராத்தி படம் - செலோ ஷோ
சிறந்த மராத்தி படம் - ஏக்தா கே ஜலா
சிறந்த அசாமி படம் - அனுர் (ஐய்ஸ் ஆன் தி சன்சைன்)
சிறந்த பெங்காலி படம் - கல்காக்கோ (ஹவுஸ் ஆப் டைம்)
சிறந்த ஒடியா படம் - பிரதிக்ஷயா