கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் |
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் விஜயகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மதுரை வீரன் என்ற படத்தில் நடித்த சண்முக பாண்டியன், அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சண்முக பாண்டியன் தனது மூன்றாவது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ ஆகஸ்டு 25ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜயகாந்த் நாளை வெளியிட உள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் விஜயகாந்த் கூறுகையில், எனது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் நாளை 25- 8 -2018 வறுமை ஒழிப்புத்தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.