'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த 'துணிவு' படம் வெளியாகி 7 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அவர் நடிகராக படப்பிடிப்பு தளத்திற்கு செல்லவில்லை. சினிமா துறையைத் தாண்டி தற்போது பைக்கில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது துபாய் பைக் பயணத்தை முடிந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தனர். ஆனால், அடுத்த கட்டத்திற்கு படம் நகரவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் நேற்று சென்னை திரும்பியதை தொடர்ந்து லைகா உரிமையாளர் சுபாஸ்கரனும் இன்று சென்னை வருகிறார். இனி வரும் நாட்களில் இருவரும் விடாமுயற்சி படத்தை தொடங்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பேச்சு வார்த்தை நல்ல படியாக முடிந்த பிறகு செப்டம்பர் மாதத்தில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என்கிறார்கள்.
ஏர்போட்டில் சுற்றி வளைத்த ரசிகர்கள்
அஜித்தை காண வந்திருந்த ரசிகர்கள் அவரிடத்தில் செல்பி எடுக்க சுற்றி வளைத்தார்கள். ஆனால் அவரோ, யாருக்கும் போஸ் கொடுக்காமல் வேகமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு விட்டார். இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.