'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் அதேவேளையில் இன்னொரு பக்கம் அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் நடக்கின்றன. ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க தயாராகிக் கொண்டிருப்பதால் இந்த 68வது படம் ஒரு அதிரடியான அரசியல் கதையில் உருவாக இருப்பதாகவும், அதற்காகவே சில சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் ஆகியோரையும் கதை விவாதத்தில் கலந்து கொள்ள வைத்து அதற்கான ஸ்கிரிப்ட்டை வெங்கட் பிரபு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தபடம் வெளியான பிறகே விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவிப்பார் என்றும் விஜய் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.