காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் | மறுபரிசீலனை செய்யும் விஜய் ஆண்டனி | யாத்திசை இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | கண்ணப்பா படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார் | நான் குடித்துக்கொண்டே இருப்பேன் : மிஷ்கின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் | டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'பாட்ஷா': தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | முதன் முறையாக தனி இசை கச்சேரி நடத்துகிறார் சித்ரா | பிளாஷ்பேக் : கே.பாக்யராஜை கொலைகாரனாக ஏற்காத ரசிகைகள் | பிளாஷ்பேக்: திரையில் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நாளை (அக்டோபர் 2ம் தேதி) இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள்.
ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு பதிலாக நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது மகேஷ் பாபு உடன் 'குண்டூர் காரம்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.