வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆறு சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன் இன்று(அக்.,01) முதல் துவங்கி உள்ளது. கமல்ஹாசனே இந்தமுறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசன் கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். போட்டியாளர்கள் விபரம் கீழே...
முதல் ஆளாக உள்ளே நுழைந்த ‛கூல்' சுரேஷ்
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே பல பிரபலங்களின் பெயர்கள் இந்த போட்டியில் பங்கேற்க போவதாக செய்திகள் வந்தன. அதில் முக்கியமான நபர் ‛கூல்' சுரேஷ். நடிகரான இவர், சமீப காலமாக திரைப்பட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானார். சில நாட்களுக்கு முன்னதாக கூட பணத்தேவை இருப்பதாகவும், உதவி கோரி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் நிகழ்ச்சியின் முதல் ஆளாக சுரேஷ் உள்ளே நுழைந்தார்.
2வது நபர் பூர்ணிமா ரவி
நிகழ்ச்சியில் 2வது நபராக உள்ளே நுழைந்திருப்பவர் பூர்ணிமா ரவி. இவர் ‛அராத்தி' என்ற யூடியூப் சேனலை துவங்கி, அதில் தனது நடன வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அதில் பிரபலமான இவர், நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, ‛ஹே சண்டைக்காரி' எனும் வெப் சீரிஸ்ல் நடித்தார். பின்னர் ‛பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் பால சரவணனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
3வது நபர் ரவீணா
நிகழ்ச்சியில் 3வது போட்டியாளராக நடிகை ரவீணா தகா சென்றுள்ளார். சின்னத்திரையில் மெளனராகம் 2 உள்ளிட்ட சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்துள்ளார். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று அசத்தினார். நடனத்தில் அசத்தி வரும் இவர் இன்ஸ்டாவில் இவர் பகிரும் ரீல்ஸ் மற்றும் போட்டோக்களுக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
4வது போட்டியாளர் பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் சீசன் 7-ன் நான்காவது போட்டியாளராக நடிகர் பிரதீப் ஆண்டனி சென்றுள்ளார். குறும்படங்கள் இயக்கி உள்ள இவர் வாழ், அருவி, டாடா போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
5வது போட்டியாளர் நிக்சன்
நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக நிக்சன் என்பவர் சென்றுள்ளார்.
6வது போட்டியாளர் விணுஷா தேவி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது போட்டியாளராக சின்னத்திரை நடிகை விணுஷா தேவி உள்ளே சென்றார். பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து அசத்தி உள்ளார். மாடலிங்கில் இருந்து வந்து சின்னத்திரையில் நடிகையாக இவர் அசத்தினார்.
7வது போட்டியாளர் மணிச்சந்திரா
நிகழ்ச்சியின் 7வது போட்டியாளர் மணிச்சந்திரா. விஜய் டிவியின் ஆஸ்தான டான்சர். பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி உள்ளார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் நடனம் ஆடி பிரபலமானார். இப்போது படங்களிலும் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
8வது போட்டியாளர் அக் ஷயா உதயகுமார்
போட்டியில் 8வது போட்டியாளராக அக்ஷயா உதயகுமார் என்பவர் சென்றுள்ளார். மாடலிங் துறையில் இவர் உள்ளார்.
9வது போட்டியாளர் வனிதா மகள் ஜோவிகா
பிக்பாஸ் சீசன் 7-ன் 9வது போட்டியாளராக ஜோவிகா விஜயகுமார் உள்ளே சென்றுள்ளார். நடிகை வனிதாவின் மகள் இவர் ஆவார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10வது போட்டியாளர் ஐஸ்ஸூ
நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக ஐஸ்ஸூ என்பவர் உள்ளே சென்றுள்ளார். இவரும் மாடலிங்கில் இருந்து வந்துள்ளார்.
11வது போட்டியாளர் விஷ்ணு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக சின்னத்திரை நடிகர் விஷ்ணு உள்ளே சென்றார். கனா காணும் காலங்கள், ஆபீஸ், சத்யா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
12வது போட்டியாளர் மாயா கிருஷ்ணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக நடிகை மாயா கிருஷ்ணன் சென்றுள்ளார். 2.0, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
13வது போட்டியாளர் சரவணா விக்ரம்
நிகழ்ச்சியின் 13வது போட்டியாளராக சின்னத்திரை நடிகர் சரவணா விக்ரம் உள்ளே நுழைந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் இவர் நடித்து வந்தார்.
14வது போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவன்
நிகழ்ச்சியின் 14வது போட்டியாளராக நடிகரும், பாடகருமான யுகேந்திரன் வாசுதேவன் சென்றுள்ளார். மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான இவர் ஏராளமான படங்களிலும் பாடி உள்ளார். பகவதி, பூவெல்லாம் உன் வாசம், யூத், திருப்பாச்சி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
15வது போட்டியாளர் விசித்திரா
நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக நடிகை விசித்திரா சென்றுள்ளார். தமிழில் ஏராளமான படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சமீபத்தில் பங்கேற்று மீண்டும் கம்பேக் கொடுத்தார் விசித்திரா.
16வது போட்டியாளர் பவா செல்லத்துரை
நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக நடிகரும், எழுத்தாளருமான பவா செல்லத்துரை உள்ளே நுழைந்துள்ளார். ஜோக்கர், பேரன்பு, சைக்கோ, குடிமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் எல்லா நாளும் கார்த்திகை உள்ளிட்ட பல புத்தகங்களும் எழுதி உள்ளார்.
17வது போட்டியாளர் அனன்யா ராவ்
நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக அனன்யா ராவ் என்பவர் உள்ளே சென்றுள்ளார். இவரும் மாடலிங்கை சேர்ந்தவர்.
18வது போட்டியாளர் விஜய் வர்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 மற்றும் கடைசி போட்டியாளராக விஜய் வர்மா என்பவர் உள்ளே சென்றார். டான்ஸரான இவர் விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி உள்ளார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடனம் ஆடிய இவர் விஜய்யின் தலைவா படத்தில் அவரின் நடன குழுவில் ஒருவராக நடனம் ஆடி உள்ளார்.
இந்த 18 போட்டியாளர்களில் யார் 100 நாட்கள் தாக்கு பிடிக்க போகிறார்கள். யார் முதல் வாரத்திலேயே வெளியேற போகிறார்கள் என்பது வரும் வாரங்களில் தெரிய வரும். தற்போதைய சூழலில் 9 ஆண், 9 பெண் போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். மேலும் வைல்டு கார்டு மூலம் மேலும் சில போட்டியாளர்கள் களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்த முறை இரண்டு வீடு என்று கூறியிருக்கிறார்கள். அதனால் கடந்த 6 சீசன்களை விட இந்த சீசன் புதுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.