காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகளும் முடிந்துள்ளன. இம்மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட தொடங்கிவிட்டது. இதற்கிடையே இரண்டு தினங்களுக்கு முன்பே லியோ படத்தை தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு அனுப்பி வைத்திருக்கிறது.
அந்த வகையில், படம் திரைக்கு வருவதற்கு 22 நாட்களுக்கு முன்னதாகவே இந்த படத்தை லியோ படக்குழு சென்சார் சான்றிதழுக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியான நிலையில், விரைவில் மூன்றாவது சிங்கிள் மற்றும் லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் அப்படக்குழு அறிவித்துள்ளது.