அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் கடந்த வாரம் அதிக அளவில் படங்கள் வெளியாகவில்லை. முன்னணி நடிகர்கள் யாரும் அந்த போட்டியில் தங்களது படங்களை வெளியிடத் தயாராக இல்லை.
இந்த வாரமும் 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் புதிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த வார இறுதி வரையிலும் 'ஜெயிலர்' படத்திற்கான வரவேற்பு அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அடுத்தடுத்து பல பெரிய படங்கள் வரிசை கட்டி வருவதால் பலரும் கிடைக்கும் இடைவெளியில் படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகும் என்று இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'அடியே,', ஆதி, யோகி பாபு, ஹன்சிகா நடிக்கும் 'பாட்னர்', ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட் நடித்துள்ள 'ஹர்காரா' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
செப்டம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.