முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது விஜய் - அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் 68வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி, அப்படத்தின் திரைக்கதை வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் வெங்கட்பிரபு. மேலும், இந்த படம் தங்கள் நிறுவனத்தின் 25வது படம் என்பதால் விஜய் நடிக்கும் இப்படத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லியோ படத்தை போலவே இப்படத்திலும் தெலுங்கு, ஹிந்தி, மலையாள நடிகர்கள் பலரும் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.