3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணி முதன்முதலாக இந்தியன் படத்தில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர்கள் இணைந்துள்ளார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியன்-2 படத்தின் காட்சிகளை பார்த்து தற்போது கமலும், ஷங்கரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படத்தை வருகிற ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி கூறுகையில், இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் இந்தியன் 2 ரிலீஸாகட்டும் இந்தியன் 3 பற்றி அடுத்து முடிவு செய்யப்படும். இது குறித்த அறிவிப்பு அந்தசமயம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.