ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம் என்ற படத்தில் இயக்குனர் ஆனார். அதன்பிறகு நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியவர், தற்போது ‛ஆர் யூ ஓகே பேபி' என்ற படத்தை இயக்கி வருகிறார். சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அபிராமி, ரோபோ சங்கர், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அதோடு லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛யூ ஆர் ஓகே பேபி படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருப்பது எங்கள் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். அதோடு இந்த படத்தின் கதை இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய கதை என்பதால் பல சவால்களை எதிர்த்து போராடி இப்படத்தை எடுத்து இருக்கிறேன். முக்கியமாக இந்த படத்தை எந்த ஒரு ஜானரிலும் வகைப்படுத்த முடியாது. அந்த அளவுக்கு கலவையான ஜானரை கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது'' என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.




