குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் லூசிபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக வெற்றிகரமான இயக்குனராகவும் அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 200 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாகும் என ஏற்கனவே பிரித்விராஜ் அறிவித்திருந்தார். சமீபத்தில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியிருந்தார். இந்த படத்தில் மோகன்லால் தவிர யார் நடிக்க போகிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் மற்றும் பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து சர்ச்சைக்கு ஆளாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இருவரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தாங்கள் இருவரும் மற்றும் இன்னொரு மலையாள நடிகர் ஆன ராகுல் மாதவ்வும் இதில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.