விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கேரளாவில் கடந்த 2018ல் ஏற்பட்ட மிகப்பெரிய மழைவெள்ள பாதிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் இந்த 15 நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்து மலையாள திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார். நிவின்பாலி, நஸ்ரியா நடித்த ஓம் சாந்தி ஓசானா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பிறகு ஒன்றிரண்டு படங்களை மட்டும் இயக்கியதுடன் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி நடிகராக மாறிவிட்டார்.
இந்த நிலையில் தான் இந்த 2018 படத்தை இயக்கி தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப். படம் வெளியான் நாள் முதல் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் மம்முட்டி இவரை தனது வீட்டிற்கு நேரிலேயே வரவழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
அதேசமயம் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மம்முட்டி இவரை பாராட்டி பேசும்போது, பேச்சுவாக்கில் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் தலையில் உள்ள ரோமங்கள் குறைவாக இருந்தாலும் அவரிடம் அதிகப்படியான அறிவு இருக்கிறது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதையடுத்து மம்முட்டி இவரது வழுக்கை தலை குறித்து கிண்டலாக பேசினார் என அப்போது ஒரு சர்ச்சை உருவானது. ஆனாலும் மம்முட்டி தன்னை பாராட்டித்தான் பேசினார் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இப்போது அவரை நேரிலேயே அழைத்து பாராட்டி மனம் குளிர் வைத்து விட்டார் மம்முட்டி.