அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர் தான். அதுமட்டுமல்ல மனதில் பட்டதை துணிச்சலாக பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள பைனரி என்கிற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், புரமோஷனுக்கு வர மறுக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் இவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர்கள் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஜாய் மேத்யூ வர மறுக்கிறார். அவர் மட்டுமல்ல, இந்த படத்தில் நடித்துள்ள இன்னும் சில நட்சத்திரங்களும் புரமோசனை தவிர்க்கின்றனர். படப்பிடிப்பு தளத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்தார் ஜாய் மேத்யூ. இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சென்றபோது இந்த ஸ்கிரிப்ட்டை படித்து ரொம்பவே விரும்புவதாக கூறியவர், பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டை தூக்கி எறிந்தார். இந்த வசனங்கள் எனக்கு செட்டாகாது, இந்த காட்சியை மாற்றுங்கள் என திடீரென கூறினார்.
மூன்று நாட்கள் கால் சீட் கொடுத்தவர் ஒவ்வொரு நாளும் மதியம் வரை நடித்துவிட்டு கிளம்பிவிட்டார். ஒரு வழியாக படத்தை முடித்து விட்டோம். இப்போது புரமோசனுக்கும் கூட வர மறுக்கிறார். புதியதாக படம் பண்ணும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நடிகர்களை ஒப்பந்தம் செய்யும்போது புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று விரக்தியுடன் கூறியுள்ளனர்.